ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொலை: டிரம்ப் தகவல்

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2019 09:26 pm
trump-confirms-death-of-osama-bin-laden-s-son-and-al-qaida-heir-hamza

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த பயங்கரவாத அமைப்பை அவரது மகன் ஹம்சா பின்லேடன் தொடர்ந்து இயக்கி வந்தார். பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்கா மீது பல்வேறு முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலில் அமெரிக்கப் படை ஹம்சா பின்லேடனை கொன்றதாக தெரிகிறது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இன்று உறுதி செய்யும் விதத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close