இருநாடுகளுக்குமான வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம் - பிரதமர் மோடி

  அபிநயா   | Last Modified : 24 Sep, 2019 01:18 pm
improving-bilateral-relationship-between-india-and-america-narendra-modi

இருநாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம் என "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்தியா அமெரிக்காவுக்கு இடையான வர்த்தக ரீதியான பிரச்சனைகள், இன்று நடைபெறவுள்ள இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு பின் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

"ஹௌடி மோடி" நிகழ்வை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும், இன்று 21:45 ஐ.எஸ்.டி நேரப்படி நியூயார்க் நகரில் வைத்து சந்திக்க உள்ளனர்.

வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அனூப் வதாவன் இருவரும் அமெரிக்க வர்த்தகத் துறை தலைவர்களை கடந்த திங்களன்று சந்தித்து உரையாடினர். அவர்கள் கூறுகையில், ட்ரம்ப் மற்றும் மோடியின் உரையாடல், சமீப காலமாக, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பொதுவான முன்னுரிமை பட்டியல் பிரச்சனை குறித்தும், பிற வர்த்தக ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையிலும் அமையப் பெறும் என்று குறிப்பிட்டனர்.

மேலும், "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி "இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நானும் அமெரிக்க அதிபரும் சந்திக்கவிருக்கும் நிலையில், இருநாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close