சாத்தானே ரேப்பிற்கு தூண்டினான்: புது காரணம் கூறிய அமெரிக்க பாதிரியார்

  அபிநயா   | Last Modified : 26 Sep, 2019 09:36 am
the-man-inside-her-provoked-me-to-rape-american-pastor

அமெரிக்க பாதிரியார் ஒருவர், "அந்த பெண்ணிற்குள் குடிகொண்டிருக்கும் சாத்தனே என்னைத் தூண்டினான்" என தான் செய்த தவறுக்கு புதிய காரணம் ஒன்றை கூறியுள்ளார்.

அமெரிக்க மேரிலாந்து நகரின் கெய்தஸ்பர்க் பகுதியை சேர்ந்த  பெந்தேகோஸ்தே பிரிவு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் ஆக்டேவியோ காண்டரிரோ (42). இவர் கடந்த ஜனவரி முதல் சுமார் 4 மாத காலமாக ஒரு பெண் சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

சிறு வயதில் தனியாக இருக்க கூடாது என்று கூறி, அவர் அந்த சிறுமிக்கு தேவாலயத்தின் உள்ளேயே ஒரு சிறிய அறை ஒதுக்கி தந்ததாகவும், தன்னை தனியேவிட மனமில்லை எனக் கூறி அந்த பெண்ணுடன் இருந்த அவர் அவளை மிரட்டி பாலியல் தொல்லைகள் செய்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். 

போலீசார் விசாரணையில், "அந்த பெண்ணின் உடலில் குடிகொண்டிருக்கும் சாத்தனே என்னை இவ்வாறு செய்யத் தூண்டினான்" எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, ஆக்டேவியோ காண்டரிரோவினால் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களை அணுகி புகார் கொடுக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

Newstm.in

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close