பாரதம் யுத்தத்தை அல்ல பௌத்தத்தை இந்த உலகிற்கு வழங்கியுள்ளது: ஐ.நா., சபையில் பிரதமர் மோடி பேச்சு 

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 10:09 pm
modi-speech-at-un-assembly

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், "உலக நாடுகளுக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அனைவரும் சேர்ந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டிய நேரம் இது. இந்த விஷயத்தில் இந்தியா எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. 

இந்தியா இந்த உலகிற்கு பலவற்றை தந்துள்ளது. இது புத்தர் பிறந்த பூமி. இந்தியா இந்த உலகிற்கு யுத்தத்தை அல்ல பௌத்தத்தைத் தந்துள்ளது. நாங்கள் எவ்வளவு சாதுவானவர்களோ, அதே அளவு கம்பீரம் எங்களிடம் உள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 

சுவாமி விவேகானந்தர், இதே அமெரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு முன் உரையாற்றுகையில், பாரதம் இந்த உலகிற்கு எவ்வளவு விஷயங்களை தந்துள்ளது என்பதை எடுத்துரைத்துள்ளார். உலகின் நன்மைக்கு அமைதியும், நல்லிணக்கமும் தேவை என்பதை எத்தனையோ ஆண்டுகளுக்கு

முன், சுவாமி விவேகானந்தர் உணர்த்தியுள்ளார். பருவநிலை மாற்றத்தின் மீது நாம் அனைவரும் கவனம் கொள்ள வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபையை புதிய பாதையில் அழைத்து செல்வோம்" என அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close