பாக்., பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2019 05:12 pm
pak-terrorist-will-attack-in-india-america

பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாகவும், அது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பாகிஸ்தான் தங்கள் நாட்டில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

இந்தோ - பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் விவகாரங்களுக்கான அமெரிக்க அமைச்சர் ரண்டால் ஸ்ரீவர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதில் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் பழிவாங்கும் எண்ணத்தில் உள்ளனர். அவர்கள், எந்த நேரத்திலும் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம். 

இந்த விவகாரத்தில், தங்கள் நாட்டில் இயங்கும் பயங்கரவாத குழுக்கள் மீது பாக்கிஸ்தான் ஒரு கண் வைத்து கவனிக்க வேண்டும். இந்த இவ்விஷயத்தில், பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவாக செயல்படாது என்றே நம்புகிறோம்" என அவர் தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close