மருத்துவ காப்பீட்டுக்கு காசில்லையா அமெரிக்காவிற்குள் நுழையாதீர்கள்: டொனால்டு ட்ரம்ப் புதிய பிரகடனம்

  அபிநயா   | Last Modified : 05 Oct, 2019 07:56 pm
if-you-can-t-pay-for-healthcare-then-don-t-enter-us-president-donald-trump

அமெரிக்காவிற்குள் குடியேற விரும்புவர்களுக்கு  குடியேற்றக் கொள்கையில் புதிய விதிமுறையை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு குடியேற விரும்புபவர்கள் குடியேறிய 30 நாட்களுக்குள் அவர்களுக்குரிய மருத்துவ காப்பீடை பெற்றிட வேண்டும் அல்லது மருத்துவ செலவுகளை சொந்தமாக சமாளிக்கும் திறன் வாய்ந்திருந்தால் மட்டுமே குடியேற விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய பிரகடனத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிமுகபடுத்தியுள்ளார்.

வரும் 2020 ஆம் ஆண்டில் அமெரிக்கா, சுமார் 18,000 அகதிகளுக்கு இடமளிக்க முடிவு செய்துள்ள நிலையில், அமெரிக்காவிற்குள் குடியேற விரும்புவர்களுக்கான மருத்துவ செலவுகளும் சேரும் போது, அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். அதை சரி செய்யவே, அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த சட்டம் வரும் நவம்பர்  3 முதல் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close