93 பெண்களை  கொன்ற 73 வயதான சீரியல் கில்லரின் வாக்குமூலம் !

  கண்மணி   | Last Modified : 08 Oct, 2019 02:40 pm
73-year-old-serial-killer-confesses-to-killing-93-women-in-america

அமெரிக்கா முழுவதும் 90 க்கும் மேற்பட்ட பெண்களைக் கொன்றதாகக் கூறும் 79 வயதான சாமுவேல் லிட்டில், அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமான தொடர் கொலைகளை செய்தவராக  கருதப்படுகிறார்.


அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் லிட்டில் முன்னாள் குத்து சண்டை வீரர். சிறைத்தண்டனையில் இருக்கும் இவர் கடந்த 1970 முதல் 2005 வரை அமெரிக்காவின் பல இடங்களை சேர்ந்த  சுமார் 90 கொலைகளுக்கு தான் காரணம்  என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  இவரால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 39 வயதை கடந்த பெண்கள்.

இவர் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களும், காணாமல் போன பல பெண்கள் குறித்த உண்மைகளும் வெளியாகியுள்ளது. அதோடு தான் கொலை செய்த பெண்களின் உருவப்படத்தை  சாமுவேல் லிட்டிலே தனது கைப்பட வரைந்து கொடுத்துள்ளார்.

கொடூர குணம் படைத்த இந்த கொலைகாரனால் உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானோர் கறுப்பின பெண்களாக இருக்கின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களையும் ,  வாழ்வில் பல பிரச்னைகளுடன் இருக்கும் பெண்களுக்கு ஆதரவு கொடுப்பது போல பழகி பின்னர் அந்த பெண்களை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் சாமுவேல் லிட்டில். அவருடைய வாக்குமூல வீடியோவை  எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close