மே.8, 2018 - உலக செய்திகள்

Last Modified : 08 May, 2018 08:20 pm

சிங்கப்பூரில் சந்திக்கின்றனர் கிம் ஜோங்- ட்ரம்ப்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு வரும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடக்க இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

4-வது முறையாக ரஷ்ய அதிபராக பதவி ஏற்றார் புடின்:

ரஷ்ய அதிபராக 4-வது முறையாக புதின் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டார்.

ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணியை தலையால் உடைத்து உலக சாதனை:

பாகிஸ்தானைச் ரஷித் நஸீம் என்ற கராத்தே வீரர், ஒரு நிமிடத்தில் 43 தர்பூசணி பழங்களை தலையால் உடைத்து ஜெர்மனி வீரரின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

நாளை வெளியாகும் ட்ரம்பின் முடிவு: அமெரிக்காவை இறுதியாக எச்சரித்த ஈரான்:

ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பான தனது முடிவை நாளை (புதன்கிழமை)அறிவிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவது வரலாற்று தவறு என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.

பின்லாந்தின் உறைபனி கடலில் சிக்கிய கப்பல்:

பின்லாந்து கடல் பரப்பில் உறைபனிக்கு நடுவே சிக்கி தவிக்கும் கப்பலை மீட்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. அந்நாட்டின் வடக்கு கேஸ்ட்ரோபோனியா பிராந்தியத்தில் உள்ள 981 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி தீவான ஹைலூஓட்டோவுக்கு அருகே கப்பல் ஒன்று உறைபனிக்கு நடுவே சிக்கிக் கொண்டது. அந்த கப்பலை மீட்க, உறைபனியை உடைத்து பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close