உலகின் 'பவர்புல்' மனிதர்கள் யார் தெரியுமா?

  முத்துமாரி   | Last Modified : 09 May, 2018 07:18 pm

உலகின் பிரபல நாளிதழான போர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு வருடமும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று உலகின் சக்திவாய்ந்த 75 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களில் முக்கிய பிரபலங்கள் எந்த இடத்தை பிடித்துள்ளனர் என பார்ப்போமா...

1ம் இடம்: சீன அதிபர் ஸி ஜின்பிங்:

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான இவர், 2013ம் ஆண்டு முதல் சீனாவின் அதிபராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில், சீன அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து, அந்நாட்டின் வாழ்நாள் அதிபராக இருக்கும் அளவிற்கு அதிகாரம் பெற்றுள்ளார்!

2ம் இடம்: ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்

ரஷ்யாவின் அதிபராக 4ம் முறையாக சமீபத்தில் பதவி ஏற்றுள்ளார். கடந்த தேர்தலில் 77% ஓட்டுகள் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். சோவியத் யூனியன் ரஷ்யாவில் இவ்வளவு ஓட்டுகள் யாரும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த முறை போர்ப்ஸ் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் உலக சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தார்.

3ம் இடம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றார். அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுபவர். கடும் எதிர்ப்பையும் மீறி, பாரிஸ் ஒப்பந்தம், ஈரான் ஒப்பந்தம் என பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்காவை விலக வைத்தார்.

4ம் இடம்: ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்

ரஷ்ய அதிபர் புதின் போலவே இவரும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில் 4ம் முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதிகமான மக்கள் செல்வாக்கை பெற்றவர். கன்சர்வேட்டிவ் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர். சிரிய மக்களுக்காக ஜெர்மனியில் குடியேற்றத்தை அதிகப்படுத்தியவர். இது மற்ற நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

5ம் இடம்: அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ்

தற்போது உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது அமேசான் நிறுவனம் பொதுமக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு ஆஃபர்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

6ம் இடம்: போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவாக கருதப்படுகிறார். மற்ற போப் ஆண்டவர்களை ஒப்பிடுகையில், இவர் மக்கள் மத்தியில் நடுநிலையராகவே பார்க்கப்படுகிறார்.

7ம் இடம்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், அந்நிறுவனத்தின் மென்பொருள் வல்லுநராகவும் இருந்துள்ளார். உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு அதற்காக பெரும்தொகையும் செலவு செய்துள்ளார்.

8ம் இடம்: சவூதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான்

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி அரேபியாவின் இளவரசராக பொறுப்பேற்றார். சவுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு சுதந்திரம், வேலைவாய்ப்பு என பல்வேறு வியத்தகு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

9ம் இடம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் பிரதமராக 2014ம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு 2017ம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். மேலும் நாடெங்கும் ஒரே வரியாக ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினார். இவை இரண்டும் உலக அளவில் பாராட்டை பெற்றது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்நாட்டுடன் நட்புறவை மேற்கொண்டு வருகிறார். இதனால் உலக நாடுகள் மத்தியில் இவரது செல்வாக்கு உயர்ந்துள்ளது.

10ம் இடம்: கூகுள் இணை நிறுவனர் லார்ரி பேஜ்

தற்போது உலககெங்கும் மக்களின் தேடுபொறியாக இருக்கும் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்கள் இவரும் ஒருவர்.

12ம் இடம்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்

மிக இளம் வயதில் பதவியேற்ற பிரான்ஸ் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். பிரான்சில் பல்வேறு வலிமை மிக்க கட்சிகள் இருந்தும் புதிய கட்சியை தொடங்கி, முதல் முயற்சியிலே அவர் கடந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது சாதனையாகவே கருதப்படுகிறது.

13ம் இடம்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்

மக்கள் அதிகம் செலவழிக்கும் முக்கிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனர் ஆவார். பேஸ்புக்கில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை புகுத்தி வருகிறார். 2017ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் 220 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

14ம் இடம்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே

கடந்த 2016ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கிறார். 200-2014ம் ஆண்டு காலகட்டங்களில் அந்நாட்டின் உள்துறை செயலராக பணிபுரிந்துள்ளார். இவரது கட்சி பிரெக்ஸிட்-க்கு ஆதரவாக செயல்பட்டதால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமெரூன் பதவி விலகினார். இதையடுத்து தெரசா மே அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார்.

24ம் இடம்: ஆப்பிள் நிறுவனத்தலைவர் டிம் கூக்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக டிம் கூக் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்றார். அதற்கு முன்னதாக 1998ம் ஆண்டில் இருந்து அந்நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.

32ம் இடம்: ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குனர் முகேஷ் அம்பானி

தொலைத்தொடர்பு வர்த்தகத்தின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 'ரிலையன்ஸ் ஜியோ' வை அறிமுகப்படுத்தி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த ஆண்டு சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் தொழிலதிபர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே நபர் இவர் தான்.

36ம் இடம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

2011ம் ஆண்டு முதல் வடகொரியாவின் தலைவராகவும், 2012ம் ஆண்டு முதல் அவரது கட்சியான 'ஒர்க்கர்ஸ் பார்ட்டி' யின் தலைவராகவும் இருந்து வருகிறார். அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் மத்தியில் பீதியை கிளப்பியவர். தற்போது பேச்சுவார்த்தைக்கு பிறகு எதிரி நாடான தென்கொரியாவுன் ஒப்பந்தம் செய்து கைகோர்த்துள்ளார். தென் கொரிய அதிபருடனான சந்திப்பை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் சந்திக்க இருக்கிறார்.

38ம் இடம்: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜப்பான் பிரதமராகவும், அவரது கட்சியான லிபெரல் டெமோகிராடிக் பார்ட்டியின் தலைவராக உள்ளார்.

40ம் இடம்: மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா

இவர் அமெரிக்க வாழ் இந்தியர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இவர் பதவியேற்ற பிறகு அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 150% அதிகமானது குறிப்பிடத்தக்கது.

54ம் இடம்: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்

தென் கொரிய அதிபராக கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். முன்னதாக அதிபராக இருந்த பார்க்-கென்-ஹே ஊழல் வழக்கில் சிக்கியதற்காக அவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தென்கொரிய அதிபராக மூன் ஜே இன் பதவியேற்றார். மேலும் எதிரி நாடான வடகொரியாவை அமைதிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதில் வெற்றியும் கண்டார்.

57ம் இடம்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் 23வது பிரதமர். 2015ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக இருக்கும் இவர் லிபெரல் கட்சியின் தலைவராக இருக்கிறார். அந்நாட்டின் இளம்வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close