பாக்தாத் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது அமெரிக்கா!

  சாரா   | Last Modified : 04 Jan, 2020 03:38 pm
us-launches-missile-strike-at-baghdad-airport

ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய விமான தாக்குதலில், ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் ஹசீத் கிளர்ச்சியாளர் குழுவின் கமாண்டர் அபு மஹ்தி அல் முகந்தீசும் கொல்லப்பட்டார். இருவர் கொல்லப்பட்டதையும், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. அவர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து, அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தாக்குதல் நடந்துள்ளது. காசிம் சுலைமான் கொல்லப்பட்டதை, அமெரிக்காவின் பெண்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து கூறுகையில், வெளிநாடுகளில், அமெரிக்கர்களின் நலனை காக்கும் வகையில், அதிபர் டிரம்ப் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட காசிம் சுலைமானி கொல்லப்பட்டார் என தெரிவித்தனர். ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த சுலைமானி திட்டமிட்டிருந்தார் என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close