அமெரிக்க கொடியை ட்விட்டரில் பறக்கவிட்ட ட்ரம்ப்.. பின்னணி காரணம் இது தான்..

  சாரா   | Last Modified : 04 Jan, 2020 03:37 pm
trump-who-flew-the-american-flag-on-twitter

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரில் பக்கத்தில் அமெரிக்க கொடியை பறக்கவிட்டது போன்று பதிவிட்டுள்ளார். இது ஈராக் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலையத்தில் நடைபெற்ற எவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார்.

இந்த அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரிலே ஈராக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்தியது அமெரிக்கா என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க கொடியை பதிவிட்டுள்ளார்.

மேலும், ஈராக்கில் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சோனாலி திட்டமிட்டதால் காசிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

— Donald J. Trump (@realDonaldTrump) 3 January 2020

 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close