• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

தனியார் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர் தகவல்களை வழங்கிய பேஸ்புக்!

  Newstm News Desk   | Last Modified : 08 Jun, 2018 05:35 am

indian-telecom-ministry-asks-facebook-for-explanation-over-data-sharing

வாடிக்கையாளகளின் தகவல்களை மொபைல் நிறுவனங்களிடம் வழங்கியதாக பேஸ்புக் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்புத்துறை.

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களது உரிமை இல்லாமல் தவறாக பயன்படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில், இணையதளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனத்திடம் பேஸ்புக் தனது வாடிக்கையாளர் விவரங்களை விற்றது அம்பலமானது. இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், மொபைல் உற்பத்தி நிறுவனங்களிடம், தனது வாடிக்கையாளர்கள் விவரங்களை பேஸ்புக் வழங்கியது வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில், பேஸ்புக் தனது வாடிக்கையாளர் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்கள் விவரங்களையும் அனுமதியில்லாமல் ஆப்பிள்,  சாம்சங், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இதுகுறித்து விளக்கமளிக்க இந்திய தொலைத்தொடர்புத் துறை பேஸ்புக் நிறுவனத்தை அழைத்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close