இந்தியாவின் பிளாஸ்டிக் எதிர்ப்பு நடவடிக்கை: ஐ.நா சுற்றுச் சூழல் அதிகாரி பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 06:45 pm
un-environment-chief-praises-india-s-efforts-against-plastic

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் எரிக் சோல்ஹெம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2022ம் ஆண்டுக்குள் மறு சுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்தியாவில் நடந்த நிகழ்ச்சி குறித்தும ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவர் எரிக் சோல்ஹெம் பேசியுள்ளார். அதில, “சுற்றுச்சூழல் தினத்தை இந்தியா அர்த்தமுள்ளதாக்கி உள்ளது. மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளும், தூய்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பில் இந்தியாவின் உறுதிமொழி பாராட்டத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close