உணவுக்காக ஆபத்தான பனிப்பாறை பாதைகளை கடக்கும் ஆடுகள்! சுவாரஸ்ய கதை

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Jun, 2018 08:03 pm
shepherds-alpine-crossing-straddles-history-borders

குறுகலான மலைப்பாதையில் சாரசாரையாக ஆடுகள் எல்லையை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடைகால நிலப்பரப்பைத்தேடி, இத்தாலியின் எல்லையிலிருந்து ஆஸ்திரியாவின் எல்லைக்குள் ஆடுகளை அழைத்துச்செல்லும் பாரம்பரியம் மிக்க பரிமாற்றம் இந்தாண்டும் நடைபெற்றது. 

 ஆடு மேய்ப்பதில் என்ன பாரம்பரிய பரிமாற்றம் என்ற கேள்வி நம் மனதில் எழும். ஆனால் இந்த நிகழ்வு சுமார் 1,360ம் ஆண்டுவாக்கில் தொடங்கி தற்போது வரை நடைமுறையில் இருந்து வருவதாகவும் ஆடுமேய்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர். 

இத்தாலியின் எல்லை நகரான மசோ கார்டோவிலிருந்து ஆயிரத்து 500 ஆடுகளை, கடும் குளிர் நிலவும் குறுகலான மலைப்பாதையின் நடுவே ஆஸ்த்திரியாவின் ஓட்சடால் நகருக்கு அழைத்துச்சென்றனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 ஆயிரத்து 600 அடி உயரத்தில் உள்ள குறுகலான பனி பாறை பாதைகளின் வழியே ஆடுகள் சுமார் 10 மணி நேரத்துக்குப் பயணித்துள்ளன. 

மலையேற்ற வீரர்களால் கூட முடியாத ஆபத்தான பயணத்தை கோடைகால உணவுக்காக மேய்ப்பவர்களின் ஆணைப்படி ஒற்றை பாதையில் பயணித்த ஆடுகளில் ஒரு ஆடுக்கு கூட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆடுகளுடன் சுமார் 15 மேய்ப்பவர்கள் எல்லையை கடந்துள்ளனர். 

இத்தாலி- ஆஸ்திரியா ஆகிய இரு நாட்டைச் சேர்ந்தவர்களின் திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுக்கப்பட்ட ஆடுகளை இவ்வாறு ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு அழைத்துச்செல்லும் போது இந்த நடைமுறை தொடங்கியிருக்கலாம் என்றும், இது சுமார் 1,360ம் ஆண்டுவாக்கில் தொடங்கி நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து ஆடு மேய்ப்பவரான ஜொஹான் நிடர்மயர்(86) கூறுகையில், “இந்த வழியை நான் 200 தடவை பயணித்து இருக்கிறேன். மந்தையாக சென்ற ஆடுகளுக்கு இந்த ஆண்டு எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. ஆனால் வானிலை மாற்றத்தால் கடந்த முறைகளில் இந்த ஆபத்தான பயணத்தை எளிதில் கடந்துவிட முடியவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணத்தில் ஆடு மேய்ப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லை” என்று கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close