இதுதான் கடவுளின் உருவம்! ரொம்ப யூத்தா இருக்காரே! - வைரலாகும் புகைப்படம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Jun, 2018 08:09 pm

north-karolina-university-scientists-creates-gods-images

இதுதாங்க கடவுள், இப்படிதான் இருப்பார் என வட கரோலினா விஞ்ஞானிகள் இளம் வயதினரை போன்ற ஒரு உருவத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடவுளுக்கு உருவம் இருக்கா? இல்லையா? என்ற கேள்வி நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஒரு சிலருக்கு கல் கடவுள், மற்றொருவருக்கு பீடம் கடவுள், சிலருக்கு புத்தகமும், புத்தகத்தின் வசனங்களுமே கடவுள் என பல வகைகளில் கடவுளுக்கு நாம் உருவம் கொடுத்து வைத்துள்ளோம். ஆனால் உண்மையில் கடவுள் இருக்காரா? எப்படி இருப்பார்? கடவுள் ஆணா? பெண்ணா? என்ற ஆய்வில் வட கரோலினா விஞ்ஞானிகள் களமிறங்கினர்.

வட கரோலினா பல்கலைக்கழகத்தின் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் ஒரு படத்தை வரைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான  இந்த புகைப்படத்தினை பார்த்துவிட்டு, கடவுள் கிளின் ஷேவ் செய்துள்ளாரே, அப்ப கடவுள் பெண் இல்லையா? கடவுள் வெள்ளையாக, ஸ்மார்ட் ஹீரோ போன்று உள்ளாரே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் சிலர், மோனலிசாவின் ஓவியத்தை போன்று உருவத்தை காட்டிவிட்டு கடவுள் என்கின்றனர் இதை எப்படி நம்புவது என கிண்டலடித்து வருகின்றனர். இதுதான் கடவுளாம்பா எல்லாரும் கும்பிட்டுக்கொங்க என அட்வைஸ் சொல்கிறது  இன்னொரு கும்பல்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.