மேற்கு ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 08:12 am
powerful-quake-in-western-japan-many-injured

மேற்கு ஜப்பான் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகி இருப்பதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கின்றன ஒசக்கா, கியோடா மற்றும் ஷிகா பகுதிகள். இந்த பகுதிகளில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுககம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதில் 9 வயது சிறுமியும், 81 வயது ஆணும் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் பல்வேறு இடங்கில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close