கால்கள், வால் வெட்டப்பட்ட நாய்குட்டி: துருக்கியில் அதிர்ச்சி சம்பவம்

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 09:31 am
puppy-dies-after-four-feet-cut-off-in-turkey

துருக்கியில் கால்கள், வால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாய்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. 

மேற்கு துருக்கி பகுதியில் கடந்த 15ந்தேதி சபான்கா என்னும் இடத்தில் கால்கள், வால் வெட்டப்பட்ட நிலையில் நாய்குட்டி ஒன்று வலியில் துடித்துக்கொண்டு இருந்தது. இதனை பார்த்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அந்த நாய்குட்டியை கொண்டு சென்றனர். அங்கு அந்த நாய்குட்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. ஆனால் அந்த நாய்குட்டி சிகிச்சை  பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இதனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது துருக்கியில் அரசியில் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close