பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- ஐ.நா

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Jun, 2018 06:20 am
world-s-hungry-population-on-the-rise-again-says-un-report

உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் மே 28 ஆம் தேதி ‘உலக பசி தினம்’ அனுசரிக்கப்படுகிறது. உணவு கிடைக்காமல் ஒரு கூட்டமும், உணவு சாப்பிட நேரம் கிடைக்காமல் ஒரு கூட்டமும் சுற்றிதிரிகிறது. உலகில் கடும் நோயினால் இறப்பவர்களைவிட பசியால் இறப்பவர்களே அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. மேலும் உலகத்தில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60% பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இந்த வருட உலக பசி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆய்வில், உலகின் 18 நாடுகளில் உணவுப்பற்றாக்குறை காரணமாக, மக்கள் பசியால் வாடுவது தெரியவந்துள்ளது. ஒருமனிதன் ஆரோக்கியமாக இருக்க நாள்தோறும் அவரது உணவின் வாயிலாக 2,100 கலோரி கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வரையறுத்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு சுமார் 77 கோடியாக இருந்த பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு 85 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. பசியால் வாடுபவர்கள் பெறும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களே ஆவர். பல்வேறு நாடுகளில் ஏற்படும் போர் மற்றும் வன்முறையால் சொந்தநாட்டை விட்டு வெளியே செல்லும் மக்களே பசிக்கு ஆளாவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்கும் பசி என்ற பிணியை ஒழிக்க பிற நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close