ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் கைது

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 02:26 pm
former-malaysian-pm-najib-razak-arrested-by-malaysia-s-anti-graft-agency

ஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார். 

மலேசியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோல்வியை சந்தித்தது. அப்போது மலேசிய பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக் பதவி இழந்தார். முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. 

அந்த தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதை முன் வைத்து தான் எதிர்கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

இப்போது இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாக பிரதமர் மகாதீர் முகமது கூறியிருந்தார். மேலும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று ஊழல் வழக்கில் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக  ரசாக்கின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் மலேசிய போலீசார் சில தினங்களுக்கு முன்பு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான  நகைகள், ரொக்கம், நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ஆடம்பர பைகள், 200க்கும் மேற்பட்ட பெட்டிகள் என ஏராளமான பொருட்கள்  கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close