மேகங்களை திருடுகிறது இஸ்ரேல்: ஈரான் குற்றச்சாட்டு

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Jul, 2018 05:51 pm
israel-stealing-clouds-causing-drought-iranian-general

எங்கள் நாட்டு மேக கூட்டங்களை இஸ்ரேல் திருடுவதால், எங்களுக்கு வறட்சி நிலவுகிறது என ஈரான் குற்றச்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து ஈரான் பாதுகாப்புத்துறை தளபதி கோலாம் ரேஸா ஜலாலி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ஈரானில் மழை பொழிவதை தடுக்க இஸ்ரேல் மேக கூட்டங்களை திருடிவிடுகின்றது. ஈரானில் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் இஸ்ரேல் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஈரானில் மழைப்பொழிவை தடுக்க வான் வெளியில் நுழையும் மேகக்கூட்டங்களை இஸ்ரேல் திருடிவிடுகின்றது என சந்தேகம் கொள்கிறோம். இதனால், எங்கள் நாட்டில் மிகவும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

விண்வெளியில் உள்ள மேகக்கூட்டங்களை ஆய்வு செய்யும்போது விண்ணில் 2,200 மீட்டர் உயரத்தில் ஈரானை தவிர்த்து ஆப்கானிஸ்தான் முதல் மெடிடர்ரனியன் கடல் வரை  வரை மழை மேகங்களால் சூழப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அது ஈரானுக்குள் நுழையும்போது என்ன ஆகின்றது என்று தெரியவில்லைல" எனக் கூறினார். 

ஆனால் அவரது கருத்தை ஈரான் வானிலை ஆய்வு மையத் தலைவர் ஆஹத் வசிஃபின் மறுத்துள்ளார்.  "மேகக்கூட்டங்கள் ஒன்றும் ஆவணங்கள் இல்லை அதனை திருடுவதற்கு. ஒரு நாடு மற்றொரு நாட்டின் பனி அல்லது மேகங்களைத் திருடுவதற்கு சாத்தியமே இல்லை” என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close