9வது மாடியில் இருந்து விழுந்த நாய்! கேட்ச் பிடித்து காப்பாற்றிய இளைஞர்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Jul, 2018 08:10 am
dog-catcher-moment-hero-neighbour-catches-dog-falling-100ft-from-ninth-floor-balcony-and-saves-its-life

பிரேசிலில் 9வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாயை இளைஞர் ஒருவர் கேட்ச் பிடித்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசிலில் ஜோவோ அகஸ்டோ என்ற நபர், சா பாலோ நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அவரது பக்கத்து வீட்டில் உள்ள மெல் எனும் நாய், ஒன்பதாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளது. அதனை கீழிருந்து எதார்த்தமாக பார்த்த ஜோவோ சுமார் 100 அடி உயரத்தில் இருந்து ஓரிரு நொடிகளில் விழுந்த நாயை, அகஸ்டோ லாவகமாக பிடித்து காப்பாற்றியுள்ளார்.

இதனால் சிறு காயமின்றி நாய் உயிர் தப்பியது. பதட்டத்தில் அந்த நாய் உடனே சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியது. ஆனால் அகஸ்டோவுக்கு தான் சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாயின் உயிரை காப்பாற்றிய அந்த இளைஞருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close