ரூவாண்டாவில் முதல் இந்திய தூதரகம்

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 06:14 am

first-indian-high-commission-in-rwanda-announced

ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இந்தியாவின் முதல் தூதரகம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ரூவாண்டா நாட்டுடனான உறவை வளர்க்க பிரதமர் மோடி, நேற்று அங்கு பயணம் மேற்கொண்டார். 5 நாள் பயணமாக 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி செல்கிறார். பின்னர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரூவாண்டாவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்றதை தொடர்ந்து, மோடி அங்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் அதிபர் பால் ககாமேவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் மோடி ஈடுப்பட்டார். 

சந்திப்பை தொடர்ந்து பேசிய அவர், ரூவாண்டாவில் முதல் இந்திய தூதரகம் அமைக்கப்படும் என தெரிவித்தார். தற்போது ருவாண்டா நாட்டிற்கான இந்திய தூதர் உகாண்டாவில் வசித்து வருகிறார்.

வர்த்தக, முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close