இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Aug, 2018 06:51 pm

magnitude-7-earthquake-rocks-indonesia-s-lombok-island-usgs

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவு பகுதியில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் பாதிப்படைந்தது. இதனால் ஏராளமான மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம் பூமியில் 15 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. இதனால், சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்பகுதியில் இருப்பவர்கள் பாதுகாப்ப இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.