சுவிட்சர்லாந்து நாய்களுக்கு ஷு அணியுங்கள்

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 02:54 am

dogs-in-switzerland-to-wear-shoes

சுவிட்சர்லாந்து நாட்டில் வெப்ப அலைகளில் இருந்து நாய்களைக் காப்பாற்ற காலணிகளை அணிவிக்குமாறு காவல் துறையினர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காற்றில் வெப்ப அலைகள் தற்போது வீசி வருகிறது. இதனால் 1864க்கு பிறகு அதிக அளவிலான கோடைக் கால வெப்பம் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஹாட் டாக் கேம்பைன்' எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்திலுள்ள சூரிக் நகர் காவல் துறை தொடங்கியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. குளிர் பிரதேசமான அந்நாட்டில், சென்ற ஜூலை மாதம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் வறட்சி உண்டாகியுள்ளதாக, ஸ்விஸ் இன்ஃபோ  இணையதளம் தெரிவிக்கிறது

30 டிகிரி செல்சியஸ் வெப்பம் என்பது நிலத்தில் காலூன்றி நடக்கும் நாய்களுக்கு 50 - 55 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமாகத் தோன்றும் என்பதினால் காலணிகளை அணிவிக்குமாறு காவல் துறை கேட்டுகொண்டது. மேலும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close