சூரியனை ஆய்வு செய்ய புறப்பட்டது நாசாவின் பார்க்கர்!

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2018 01:39 pm
nasa-s-parker-solar-started-its-epic-journey-to-touch-the-sun

சூரியனுக்கு அருகே சென்று ஆய்வு செய்யும் பார்க்கர் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது நாசா.

சூரியனின் மேற்பரப்பு வரை சென்று ஆய்வு செய்யும் வகையில் பார்க்கர் சோலார் புரோப் என்ற செயற்கைகோளை 20 லட்சம் அமெரிக்க டாலரில், நாசா மையம் தயாரித்தது. சூரியன் அருகே 64 லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவில் பறக்கும் இந்த செயற்கைகோள் 1, 370 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறிய கார் அளவுள்ள பார்க்கர் சோலார் புரோப், மணிக்கு சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். இந்த வேகத்தில் சென்றால், அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து, சீனாவின் பீஜிங்க்குக்கு ஒரு நிமிடத்தில் சென்றுவிடலாம். இந்த விண்களம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. 

முன்னதாக சனிக்கிழமை காலை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தள்ளவைக்கப்பட்டது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close