நீ தீவிரவாதி.. முகத்தை காட்டு! பர்தா அணிந்திருந்த பெண்ணை மிரட்டிய ஓட்டுநர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Aug, 2018 10:13 pm
bus-driver-demands-muslim-woman-to-remove-her-niqab-in-uk

லண்டனில் பர்தா அணிந்திருந்த பெண்ணை பேருந்து ஓட்டுநர் மிரட்டியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனின் ஈஸ்டனிலிருந்து, பிரிஸ்டல் சிட்டி சென்டர் பகுதிக்கு ‘ஃபர்ஸ்ட் பஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான 24-ம் எண் பேருந்தில் 20 வயதான இஸ்லாமிய பெண், அவர்களது பர்தாவுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் கையில் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. அதை பார்த்த பேருந்து ஓட்டுநர், "உன்னை பார்த்தால் தீவிரவாதி போன்று உள்ளது, பேருந்துக்கு வெடிகுண்டு வைக்க வந்தாயா?" என மிரட்டி முகத்தில் போட்டிருந்த பர்தாவை விலக்கி காட்டுமாறு கூறியுள்ளார்.

இதைபார்த்துக்கொண்டிருந்த மற்றொரு இஸ்லாமிய பெண், “அந்த பெண் எப்படி உடை அணிந்திருந்தாள் உங்களுக்கு என்ன? நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலை படுகிறீர்கள்? என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அந்த ஓட்டுநர், “ உலகம் மிகவும் ஆபத்தானது. அவள் யாரென பார்க்க வேண்டும். எல்லோர் முகத்தை பார்க்கவேண்டும்” என கலாட்டா செய்துள்ளார். 

இந்த சம்பவத்திற்கு ஃபர்ஸ்ட் பஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close