நண்பருக்கு சாக்லேட் கார் கிஃப்ட்!

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2018 07:37 am
chocolate-car-suprise-in-australia

நண்பருக்கு சாக்லேட் பிடிக்கும் என்ற ஒரே காரணத்தினால் அவரது கார் முழுவதும் சாக்லேட்டை நிரப்பி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாக்லேட் என்றால் யாருக்கு தான் புடிக்காமல் போகும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அவருக்கு பிடித்த சாக்லேட்டுகளை தனது காரில் நிரப்பினர். அந்த காரில் சாக்லேட்டுகளை நிரப்ப பெரிய குழுவின் உதவியோடு செய்துள்ளார் இந்த நண்பர். பின்னர், அவர் நண்பரை வரவழைத்து காரைத் திறக்கச் செய்தபோது, அதில் இருந்து சாக்லேட்டுகள்  மழை போல கீழே கொட்டியது. இதனைக் கண்ட இருவரும், அதில், குதித்து விளையாடி  மகிழ்ச்சி அடைந்தனர்.

பாசத்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திய நண்பருக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவித்து வருகின்றனர். இதுபோல வித்தியாசமான முறையில் தன் நண்பரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதால் அந்த வீடியோ காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close