ஓய்வு பெறும் மோப்ப நாய்களை இனி தத்தெடுக்கலாம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Aug, 2018 07:25 am
hdb-residents-allowed-to-adopt-retired-sniffer-dogs

சிங்கப்பூரில் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பயன்படும் மோப்ப நாய்களை இனி தத்தெடுத்துக்கொள்ளலாம் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 

சிங்கப்பூர் காவல்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படை கே- 9 மற்றும் இராணுவ வேலைக்காக பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றவுடன் அதனை தத்தெடுத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு Project ADORE என பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாய்களை பெற விரும்புவோர் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை பணியில் இருந்து ஓய்வுபெற்ற 14 மோப்ப நாய்களைத் தத்து கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லாபரடார், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு, பாய்ண்ட்டர்ஸ் ஆகிய நாய் இனங்கள் மோப்ப நாய் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவை கட்டளைக்கு கீழ்படிதல், மோப்ப சக்தி அதிகம் உண்டு, எஜமானருக்கு உண்மையாக இருப்பது போன்ற குணங்களுடன் இருக்கும் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close