சர்வராக களமிறங்கிய ரோபோக்கள்! டிப்ஸ் கேட்குமா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Aug, 2018 07:26 am

chinese-restaurants-turning-to-robots-to-replace-waiters

சீனாவில் அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான ரெஸ்டாரங்களில் உணவுகளை பரிமாற ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பல துறைகளில் அசத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள உணவகங்களில் உணவு சாப்பிடவரும் வாடிக்கையாளர்களுக்கு கணிவுடன் உணவு பரிமாறும் சர்வராக ரோபோக்கள் களமிறங்கியுள்ளது. 

இதுகுறித்து உணவக நிர்வாகம் கூறுகையில், சர்வாக பணி புரிவர்களுக்கு 15000 டாலர்கள் சம்பளமாக கொடுக்க வேண்டியுள்ளது. இரவு, பகல் அவர்கள் ஷிப்ட்களில் வரவேண்டும். அப்போது பலர் விடுமுறை எடுத்துவிடுகின்றனர். இதனால் வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இத்தகைய குறைகளை போக்க ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை இடைவேளையில்லாமல் என்ன வேலை சொன்னாலும் கச்சிதமாக செய்து முடித்துவிடுகின்றனர். ரோபோக்களுக்காக செலவழிக்கப்படும் பணமும் குறைவு என தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் நிறுவனம், 2020க்குள் ரோபோக்களே உணவை தயாரித்து பரிமாறும் 1000 உணவகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

ரோபோக்களின் சேவைக்குறித்து வாடிக்கையாளர் ரோபட்.ஹீ கூறுகையில், “தங்களுக்கு தேவையான உணவுகளை ஆப் மூலமாக ஆர்டர் செய்துவிட்டு ரெஸ்ட்ராண்டுக்குள் அமர்ந்தாலே போதும். இருக்கும் இடத்திற்கு மிக விரைவில் வந்து மினி ரோபோக்கள் வந்து உணவினை பரிமாறும். இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.