பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற பெண் அமைச்சர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 20 Aug, 2018 09:46 pm
pregnant-new-zealand-minister-cycles-to-delivery-ward

நியூசிலாந்தில் பெண் அமைச்சர் தனது பிரசவத்திற்கு தானே சைக்கிளில் மருத்துவமனைக்கு வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூலாந்து நாட்டில் இணை போக்குவரத்து போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் ஜூலி அன்னே ஜென்டர்(38). முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக, பிரசவகால விடுமுறையில் இருந்துள்ளார். பிரசவத்திற்கான தேதி வந்தவுடன் மருத்துவமனையில் சேர்வதற்கு வீட்டில் இருந்து ஆக்லாந்து என்னுமிடத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.  வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அவர் சைக்கிளிலே பயணம் செய்துள்ளார். அப்போது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூலாக ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜென்டரின் தைரியத்தை பல பெண்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு பிரசவத்திற்காக காரில் செல்லும் பெண்கள் மத்தியில், கூலாகவும், தைரியமாகவும் சைக்கிளில் பிரசவத்திற்காக சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close