வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும் உணவை திருட்டுத்தனமாக உண்ணும் ஊழியர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Aug, 2018 07:01 am
caught-on-camera-chinese-delivery-man-eats-customer-s-meal-fired

சீனாவில் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சென்று டெலிவரி கொடுக்க வைத்திருந்த உணவை ஊழியர் ஒருவர் திருட்டுத்தனமாக சாப்பிடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள பிரபல மேய்டுவான் என்ற உணவு டெலிவரி செய்யும் செயலியில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். மேய்டுவான் நிறுவனத்தில் டோர் டெலிவரி செய்யும் பணி செய்யும் ஊழியர் ஒருவர் சிஹி என்ற இடத்தில் உள்ள அந்த வாடிக்கையாளரிடம் உணவு கொடுக்க சென்றுள்ளார். உணவை கொடுக்க குடியிருப்பின் லிப்டில் ஏறிய அவர் திடீரென உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டார். வாடிக்கையாளர் ஆர்டர் செய்திருந்த சூப்பையும் குடித்துவிட்டார். பிறகு பாதி உணவுடன் கூடிய அந்த பார்சலை புதியதுபோன்று சரி செய்து வாடிக்கையாளரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த காட்சிகள் குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close