ஏ.கே 47 தயாரித்த நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் குதித்தது!

  கனிமொழி   | Last Modified : 24 Aug, 2018 06:36 pm
russia-s-electric-car-competes-with-tesla

அமெரிக்க நிறுவனத்துக்கு போட்டியாக ஏ.கே 47 துப்பாக்கி தயாரித்த ரஷ்ய நிறுவனமும் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முத்திரை பதித்த டெஸ்லா கார் நிறுவனம் மாடல் 3 என்ற குறைந்த விலை காரை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவில் இந்த கார் விற்பனைக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த காருக்கு ஆன்லைனில் முன்பதிவு குவிந்தன. இந்நிலையில் டெஸ்லாவிற்கு போட்டியாக ரஷ்யாவில் மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி நிறுவனமான கலாஷ்னிகோவ் பழங்கால கார்களை போன்ற வடிவமைப்பை கொண்ட மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ.கே47 என்னும் உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் துப்பாக்கியை உருவாக்கிய நிறுவனம்தான் இந்த கலாஷ்னிகோவ்.

1970களில் கார் சந்தைகளில் காணப்பட்ட கார்களின் வடிவமைப்பை போல இந்த கார்களின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 1970ம் ஆண்டு வெளியான சோவியட் ஹாட்ச்பேக் கார் போன்ற அதே வடிவத்தில் தான் இந்த மின்சார கார் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் சிவி-1 என்னும் இந்த மின்சார கார்கள் உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லாவுக்கு கடும் போட்டியளிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close