ரியல் மோமோ பாத்துருக்கீங்களா! இவருதான் அவரு!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Aug, 2018 04:02 am
he-s-got-his-eyes-on-the-prize-teenager-sets-his-sights-on-world-record-attempt-after-becoming-an-internet-sensation-by-filming-himself-popping-his-eyes-out

ரியல் மோமோ போன்று கண்களை வெளியே கொண்டுவரும் பாகிஸ்தான் நாட்டு இளைஞரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சில மாதங்களுக்கு முன் உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் வைரலான புளூவேல் சேலஞ்சை அடுத்து கடந்த 2 மாதங்களாக மோமோ சேலஞ்ச் வைரலாகி வருகிறது. இந்த விளையாட்டால் தமிழகத்தில் கூட ஒருசில தற்கொலை மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மனநிலை பாதிக்கப்பட்ட ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட பெண்ணின் உருவத்தை முன்னிறுத்தி இந்த விளையாட்டு உருவாக்கப் பட்டுள்ளது. அந்த ஏலியன் உருவமுள்ள பெண்ணின் பெயரே 'மோமோ'. கண் விழி பெரிதாக இருக்கும் இந்த மோமோவே விளையாட்டுக்கான டாஸ்க்கை கொடுக்கும்.

இதுவெறும் அனிமேஷன் பொம்மைதான் என நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோமோ போன்று கண்விழியை முகத்திற்கு வெளியே கொண்டுவந்து உலக சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த அகமது கான் என்ற அந்த இளைஞர், டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனைப் பார்த்து கடந்த 2 ஆண்டுகளாக கண் விழியை வெளியே கொண்டு வர முயற்சி செய்துள்ளார். அதற்காக பல முறை முயன்று தற்போது 12 மில்லி மீட்டர் வரை கண் விழியை வெளியே கொண்டு வந்துள்ளார். உலகிலேயே அதிக நிமிடங்கள் விழிகளை வெளியே வைத்தவர் என்ற உலக சாதனையையும் பெற்றுள்ளார்.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close