உலகின் நீளமான சான்ட்விட்ச் தயாரித்து மெக்சிகோ

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2018 06:26 am

largest-sandwich-made-in-mexico

மெக்சிகோவில் 70 அடி நீளம்  சான்ட்விச்சை தயாரித்து சமையல் கலைஞர்கள் சாதனை படைத்துள்ள புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மெக்சிகோவில் மட்டும் அல்லாமல் இதர நாடுகளிலும் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவாக சான்ட்விச் இருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நகரத்தில் அதிக நீளம் கொண்ட சான்ட்விச்சை தயாரிக்க சமையல்  கலைஞர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிலோ கணக்கில் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் கொண்டுவரப்பட்டு பிரம்மாண்ட முறையில் சான்ட்விச் தயாரிக்கப்பட்டது. 

இந்த சான்ட்விச் 70 அடி நீளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதிக நீளத்திற்கு செய்யப்பட்ட சான்ட்விச்சின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர் மெக்சிகோ சமையல் கலைஞர்கள்.
newstm.in 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close