இந்த மாத உறுதிமொழி! சமூக வலைதளங்களை கைவிட்ட 10,000 பேர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Sep, 2018 06:35 am
scroll-free-september-can-you-ditch-social-media-for-a-month

சமூக வலைத்தளத்தில் செலவிடும் நேரத்தை குறைக்கும் வகையில் இந்த மாதம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில்லை என 51 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

ராயல் சோசைட்டி ஃபார் பப்ளிக் ஹெல்த் எனும் லண்டனைச் சேர்ந்த அமைப்பு, சமூக வலைத்தளத்திலேயே மக்கள் வெகுநேரம் செலவிடுவதாகவும், அதனால் பல்வேறு பாதிப்பிற்குள்ளாவதாகவும் கூறி ஸ்க்ரால் ஃப்ரீ செப்டம்பர் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. இதில் கலந்துக்கொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்றிலிருந்து இந்த மாதம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில்லை என உறுதிமொழி எடுத்துள்ளனர். இன்னும் பலர் இந்த விழிப்புணர்வு பயணத்தில் இணையவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close