பிரேசில் அருங்காட்சியகத்தில் தீ விபத்து: கருகிய 2 கோடி கலைப்பொருட்கள்

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 02:45 pm

20-million-historical-artifacts-destroyed-in-brazil-national-museum-fire

பிரேசிலில் உள்ள பழமையான அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 கோடி கலைப்பொருட்கள் எரிந்து நாசமாயின. 

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் மிகவும் பழமையான அருங்காட்சியகம் உள்ளது. இதில் பிரேசில் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப்பொருட்கள் உள்ளிட்ட பிற நாடுகளின் கலைப்பொருட்கள் என 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

200 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர்.

அருங்காட்சியகம் மூடப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பற்றியிருக்கலாம் என்றும், யாரும் கவனிக்காததால்  கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி உள்ளன. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. 

இந்த அருங்காட்சியகத்தின் பாழடைந்த நிலை மற்றும் அரசாங்கத்தின் நிதி குறைப்பு குறித்து ஊழியர்கள் தங்கள் கவலைகளை ஏற்கனவே தெரிவித்ததாக கூறப்படுகிறது.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close