கென்யா நாட்டு அதிபரை 'குரங்கு' என சமூக வலைதளங்களில் விமர்சித்ததாக சீனாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவை சேர்ந்த தொழிலதிபர் லியு ஜியாச்சி என்பவர் கென்யாவில் தொழில் செய்து வருகிறார். அவர் தனது ஊழியர்களிடம் எழுந்த சர்ச்சையின்போது உடன் பணியாற்றும் கென்யர்களையும் அந்நாட்டு அதிபர் ஹூரு கென்யாட்டாவையும்பி 'குரங்கு' என அழைத்துள்ளார். அவர் அவ்வாறு கூறிய இரண்டரை நிமிட வீடியோ ட்விட்டரில் வைரலானது. இதையடுத்து கென்யாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் கென்யா பிடிக்கவில்லையென்றால், சீனாவிற்கே சென்றுவிடுங்கள் என ஓர் ஊழியர் லியுவிடம் கூறிய போது அவர் மேலும் தவறாகப் பேசியதாகவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரத்தையடுத்து அவரை கென்யாவிலிருந்து சீனாவிற்கு நாடு கடத்தப்போவதாகக் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கென்யா- சீனர்கள் இடையே இனவாதம் என்பது தொடர்கதையாகவே உள்ளது.