ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Sep, 2018 06:28 pm

powerful-japan-quake-triggers-landslides-kills-at-least-16-people

ஹொக்காய்டோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். 

ஜப்பானை ஜெபி புயலி இருந்து மீள்வதற்குள் வடக்கு பகுதியில் ஹொக்காய்டோ தீவில் நேற்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தெரிய வந்தது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 26 பேரை காணவில்லை என பேரிடர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து புயல், நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவினால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close