ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 166 மண்டை ஓடுகள்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Sep, 2018 06:05 am
mass-grave-site-with-166-bodies-found-in-mexico-news

மெக்சிகோவில் ஒரே இடத்தில் 166 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோவில் போதைப்பொருட்கள் அதிகளவு கடத்தும் பகுதியான வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் 166 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்ப்குதியில் தொழில் போட்டியின் காரணமாக ஏராளமான கொலைகள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 2 லட்சம் பேர், போதைப் பொருட்கள் கடத்தல் காரணமாக கொல்லபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் 37,000 பேர் மாயமாகியுள்ளதாகவும், போதை பொருள் கடத்தலில் சம்பத்தப்பட்ட 28,702 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் ஒரே பகுதியில் இருந்து 166 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதேபோன்று கடந்த 2017ஆம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close