பிரேசில்- அர்ஜென்டினா இடையே கடலுக்கடியில் இணைய சேவை!

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Sep, 2018 05:56 am
globenet-and-facebook-bring-new-submarine-cable-to-argentina

அர்ஜென்டினாவுக்காக கடலுக்கு அடியில் 2,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு இணையதள கேபிள் புதைக்கும் பணியை ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கவுள்ளது. 

தொலைத்தொடர்பு கட்டமைப்பு நிறுவனமான க்லோப் நெட்டுடன் இணைந்து கடலுக்கு அடியில் இணையதள கேபிள் புதைக்கும் பணியை பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. அர்ஜெண்டினாவுக்கு அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மால்பெக் என அழைக்கப்படும் இந்த அதிவேக இணையதள சேவை பிரேசிலின் சாவோ போலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து கடலுக்கு அடியில் கேபிள் புதைக்கப்பட்டு அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸ் நகரம் வரை சுமார் 2,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் ஆழ்கடல் வழியாக அர்ஜென்டினாஅ வரை செல்லும் முதல் கேபிள் பாதை என்ற பெருமை இந்த திட்டத்துக்கு கிடைத்துள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close