ஓவர் லோடு! படகு கவிழ்ந்து 126 பேர் உயிரிழப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Sep, 2018 08:52 pm
tanzanian-ferry-capsizes-killing-more-than-100

தான்ஸானியா நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 126 பேர் உயிரிழந்தனர்.

தான்ஸானியாவில் விக்டோரியா ஏரியில் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர்நீரில் தத்தளிப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விபத்தில் இதுவரை 126 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலரை தேடும் பணி நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் யாரும் அயல்நாட்டவர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ஆட்களை ஏற்றி சென்றதே விபத்துக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இதேபோன்று விடோரியா ஏரியில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட படகு விபத்தில் 500 பேரும், 2012 ஆம் ஆண்டு 145 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close