நடுக்கடலில் தரையிறங்கிய விமானம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 28 Sep, 2018 10:14 pm
air-niugini-plane-crashes-into-ocean-during-take-off-in-micronesia

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான மைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டபோது தவறுதலாக கடலில் விழுந்தது. 

பப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமான, நியூகினி விமான நிறுவனத்தின் போயிங் ரக விமானம் போர்ட் மோர்ஸ்பி என்ற இடத்தில் இருந்து மைக்ரோனேசியாவில் உள்ள சுக் விமான நிலையத்துக்கு வந்தது.அப்போது தரையிறங்க முற்பட்டபோது ஓடுபாதையில் இருந்து நழுவி கடலில் விழுந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். உடனே கடற்கரையில் இருந்த பயணிகளும், மீனவர்களும் படகு மூலம் விமான பயணிகளை மீட்டு கரைக்கு அழைத்து சென்றனர். இதனால் உயிர் சேதம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர். 

ஒடுபாதையில் விமானம் தரையிறங்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்றது. ஒரு கட்டத்தில் விமானத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததால், ஓடுபாதையில் இருந்து நழுவி, அருகே இருந்த கடல் பகுதியில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close