இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 28 Sep, 2018 08:01 pm

indonesian-city-hit-by-tsunami-after-strong-earthquake-reports

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று மதியம் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்தன. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நாட்டு பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. எச்சரிக்கை விட்ட சில மணி நேரங்களிலே கடலோர பகுதிகள் சுனாமி அலைகள் பல அடி உயரத்துக்கு மேலெழும்பியது. 

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close