மருத்துவ நோபல் பரிசை பகிர்ந்து கொள்ளும் அமெரிக்க - ஜப்பான் விஞ்ஞானிகள்!

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 04:49 pm
american-japan-duo-win-nobel-prize-for-medicine

புற்றுநோய் சிகிச்சை ஆய்வுக்காக, 2018ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி டஸ்க்கு ஹொஞ்சோ ஆகியோர் பெற்றுள்ளனர். 

அமெரிக்காவின் டெக்சஸ் பல்கலைக்கழகத்தின் எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் ஆய்வு கூடத்தில் பணியாற்றி வந்த ஆலிசன், நோய் எதிர்ப்பு சக்தியை 'பிரேக்' போல கட்டுப்படுத்தும் புரதம் ஒன்றை பற்றி ஆய்வு நடத்தி வந்தார். ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் பணியாற்றி வரும் ஹொஞ்சோ, ஆலிசன் போலவே, நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தி, புற்றுநோய் கட்டிகளை தாக்கும் ஒரு புரத வகையை கண்டுபிடித்துள்ளார். 

இவர்கள் இருவர் செய்த ஆய்வால், புற்றுநோய் சிகிச்சையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கும் புற்றுநோய், மருத்துவத்தின் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாகும். புற்றுநோய் செல்களை நோக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை தாக்க வைக்கும் இவர்களது தனித்துவம் வாய்ந்த ஆய்வுக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது" என நோபல் கமிட்டி ட்வீட் செய்தது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close