இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 02 Oct, 2018 08:22 am

eartquake-in-indonesia-again

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது. இதில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close