இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறும் 3 விஞ்ஞானிகள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Oct, 2018 06:13 pm
nobel-physics-prize-winners-include-first-female-laureate-for-55-years

லேசர் கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக 2018 ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு ஆல்பர்ட் நோபல் என்ற அறிஞரின் பெயரால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகின்றன. இதனடிப்படையில் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம், இலக்கியம் போன்ற துறைகளில் சாதனைப்படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு புற்றுநோய் சிகிச்சை ஆய்வுக்காக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார‌ட் மௌரு, கனடாவைச் சேர்ந்த டான்னா ஸ்ட்ரிக்ட்லேண்ட் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது. லேசர் கதிர்கள் மூலம் நுண்ணுயிரிகளை ஈர்ப்பது, கண் அறுவைச் சிகிச்சை போன்றவற்றில் லேசரை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை இந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்களில் டான்னா ஸ்ட்ரிக்ட்லேண்ட், இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெறும் மூன்றாவது பெண் விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுகிறார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close