இந்தோனேசியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரிப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Oct, 2018 06:34 pm

indonesian-quake-tsunami-death-toll-tops-1500

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது. வரலாற்றிலே இதுபோன்ற ஒரு பேரிடர் ஏற்பட்டதில்லை என உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலையில், முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு திரும்பபெறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரா நேரத்த்தில் கடல் அலைகள் மேலெழுந்தன. திடீரென ஏற்பட்ட சுனாமியில் கடற்கரையோரங்களில் அமைந்திருந்த குடியிருப்புகள், ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலு, டோங்கலா ஆகிய பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் மீட்பு பணிகள் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களிலிருந்து நிவாரண பொருட்கள் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 2லட்சம் பேருக்கு உடனடி அடிப்படை உதவி மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது. 

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close