ஜிம்பாப்வே - காலராவுக்கு 49 பேர் பலி

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Oct, 2018 07:06 pm
zimbabwe-will-vaccinate-1m-people-against-cholera-this-week

ஜிம்பாப்வேயில் காலராவுக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் மக்களுக்கு தடுப்பூசிபோடும் திட்டத்தை  அந்நாட்டு அரசு செயல்படுத்தவுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் காலரா நோய் பரவி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நோயை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், அந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. 
 இதுவரை 49 பேர் உயிரிழந்திருப்பதால், நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அந்நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close