ஹெய்தி நிலநடுக்கம்: 11 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 07 Oct, 2018 05:45 pm

11-dead-in-haiti-earthquake

வட அமெரிக்காவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவு நாடான ஹெய்தியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 11 பேர் இறந்துள்ளனர்.

திடீரென ஹெய்தியில் ஏப்ரட்டா நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். ஹெய்தியின் போர்ட் டி பாயில் இருந்து 20 கிமீ தூரத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. 

போர்ட்-டே-பாக்ஸ், க்ரோஸ் மோர்ன், சன்சோல்ம், டோர்டூகா தீவு ஆகிய இடங்களில் உள்ள மக்கள் பலர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கம், தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் முதல் அண்டை நாடான டெமினிக்கன் ரிபப்லிக் வரை உணரப்பட்டது. 

பொதுமக்கள் பதட்டப்படாமல் இருக்க வேண்டும் என்றும், அவசர உதவியாளர்களிடம் தங்களது விவரங்களை வழங்க வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் ஜான் ஹென்றி சியன்ட் ட்விட்டரில் எழுதினார்.

2010ம் ஆண்டு ஹெய்தியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.