வங்கியை மட்டுமல்ல என் வாழ்கையையும் மோசம் செய்துவிட்டார்! நிரவ் மோடி மீது புகார்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Oct, 2018 05:37 am
canadian-man-loses-us-200-000-and-his-fianc-e-thanks-to-nirav-modi-s-fake-diamonds

வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி, போலி வைரத்தைக் கொடுத்து ஏமாற்றியதால், தனது வாழ்க்கையையே இழந்து விட்டதாக, கனடாவைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினரும் சட்ட விரோதமாக கடன் வாங்கி ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்நிலையில் நிரவ் மோடி கொடுத்த போலி வைர மோதிரத்தால் தன்னுடைய திருமணமே நின்றுவிட்டதாக கனடாவைச் சேர்ந்த ஒருவர் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில், 2012 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவில் நீரவ் மோடியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பழக்கத்தின் வாயிலாக தமது காதலியைக் கரம் பிடிக்க திருமணத்திற்காக இரு வைர மோதிரங்களை ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அந்த வைரம் முற்றிலும் போலி என சிறிது காலத்திலேயே தெரியவந்துவிட்டதாகவும், இதுகுறித்து தெரிந்ததும் அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்ததாகவும் கூறியுள்ளார். தற்போதுதான் வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி சிக்கி இருப்பது தனக்கு தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm. in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close